தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மைசூரில் மக்கள் கூட்டம் விளக்குகளை காண ஆர்வம்

மைசூரில் மக்கள் கூட்டம் விளக்குகளை காண ஆர்வம்

மைசூரில் மக்கள் கூட்டம் விளக்குகளை காண ஆர்வம்


UPDATED : அக் 23, 2026 04:30 AM

ADDED : அக் 22, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 04:30 AM ADDED : அக் 22, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: தசரா முடிந்தும் மைசூரில் மக்கள் கூட்டம் அலைமோது கிறது. வண்ண விளக்குகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

மைசூரில் கடந்த 11 ம் தேதி துவங்கிய தசரா நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண, மைசூரில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு மற்ற மாவட்டத்தினர் வந்திருந்தனர். இதுதவிர லாட்ஜ்கள், ஹோட்டல்களில் வெளிமாநிலம், வெளிநாட்டினரும் தங்கியிருந்தனர்.

தசரா முடிந்ததும் ஒரு சிலர் மட்டுமே ஊர் திரும்பிய நிலையில், பெரும்பாலோனார் மைசூரிலேயே தங்கி உள்ளனர். மைசூரு நகர், அரண்மனையில் வண்ண விளக்கு அலங்காரத்தை ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ்., அணை உட்பட எங்கு பார்த்தாலும், சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.

வரும் 1ம் தேதி வரை, மைசூரு நகரில் வண்ணவிளக்கு அலங்காரம் இருக்கும் என்று, மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளதால், அடுத்த மூன்று நாட்களுக்கு கூட்டம் அலைமோத உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us