கர்நாடக நாடார் சங்கத்தில் சமுதாய பவனுக்கு அடிக்கல்
கர்நாடக நாடார் சங்கத்தில் சமுதாய பவனுக்கு அடிக்கல்
UPDATED : அக் 23, 2026 04:29 AM
ADDED : அக் 22, 2026 11:24 PM

பெங்களூரு: கமலா நகரில் உள்ள கர்நாடக நாடார் சங்க அலுவலகத்தில், சமுதாய பவன் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
பெங்களூரு கமலா நகரில் கர்நாடக நாடார் சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள காலி இடத்தில், சமுதாய பவன் கட்டுவதற்கு, சங்க பொது செயலர் எஸ்.கே.முருகேஷ் நாடார் அடிக்கல் நாட்டினார்.
அவர் பேசுகையில், ''சமுதாய பவன் கட்டுவதற்கு, நம் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள், மக்கள் பெரும் தொகை தருவதாக கூறினர். இதை நம்பி, சங்கத்தில் இருக்கும் பணத்தை வைத்து கட்டடம் கட்டப்படுகிறது. இந்த கட்டடம் கட்டப்பட்டால் சங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
''நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெரும் தொகையை தந்து கட்டடம் கட்ட உதவ வேண்டுகிறேன். மேஸ்திரி ஞானசேகரன் தலைமையில் கட்டடம் கட்டப்படுகிறது,'' என்றார்.
துணைத்தலைவர் ஏ.டி.சரவணன் நாடார், பொருளாளர் பி.வடிவேலன் நாடார், செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.செல்வன் நாடார், பி.டி.வீரஈஸ்வரன் நாடார், சி.சின்னக்கனி நாடார், பி.செல்வநாதன் நாடார், எம்.கண்ணன் நாடார், எஸ்.பீட்டர் நாடார், ஜி.சவுந்தர்ராஜ் நாடார், ஒய்.கோயில் பிச்சை நாடார், செல்வராஜ் நாடார் உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.
