UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 11:24 PM
மைசூரு: கணவருக்கு விஷ விதை கொடுத்து, கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
மைசூரு, ஹுன்சூரின், வினோபா நகரில் வசித்த ராம்பிரசாத், 35, கட்டட கட்டுமான பணி செய்தார். இவருக்கு பவித்ரா, 30, என்ற மனைவியும், மோக்ஷித், 11, சமீக்ஷா, 9, என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ராம்பிரசாத்தின் நெருங்கிய உறவினரான சுனிலுக்கும், பவித்ராவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த கணவர் ராம்பிரசாத், மனைவியை கண்டித்தார். இத னால் இவரை கொலை செய்ய, பவித்ராவும், சுனிலும் திட்டம் தீட்டினர். அக்டோபர் 16ம் தேதி இரவு, யூடியூபில் பார்த்து, ஏதோ ஒரு விஷத்தனமை கொண்ட வி தையை பொடியாக்கி, இட்லியில் கலந்து கணவருக்கு கொடுத்தார்.
அவர் இறக்காததால், நள்ளிரவு சுனிலை வரவழைத்தார். இருவரும் சேர்ந்து, ராம்பிரசாத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். மறுநாள் கணவரின் சகோதரருக்கு போன் செய்த பவித்ரா, தயிர் சாதம் சாப்பிட்டு உறங்கிய கணவர், எழுந்திருக்கவில்லை என்றார்.
அதன் பின் அங்கு வந்த சகோதரர் சந்திரஹாசா, ராம்பிரசாத்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இதை பற்றி பவித்ராவே, ஹுன்சூரு ஊரக போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.
அதன் பின் போலீசார் அக்கம், பக்கத்தினரை விசாரித்த போது, சம்பவ நாளன்று நள்ளிரவு சுனில், ராம்பிரசாத்தின் வீட்டுக்கு வந்தது தெரிந்தது. அவரையும், பவித்ராவையும் விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
