தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/திரும்பிய தசரா யானைகள் மக்கள் அளித்த பிரியாவிடை

திரும்பிய தசரா யானைகள் மக்கள் அளித்த பிரியாவிடை

திரும்பிய தசரா யானைகள் மக்கள் அளித்த பிரியாவிடை


UPDATED : அக் 23, 2026 04:28 AM

ADDED : அக் 22, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 04:28 AM ADDED : அக் 22, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ஜம்பு சவாரி ஊர்வலம் நிறைவு பெற்ற நிலையில், தசரா யானைகள் மீண்டும் தங்கள் இடத்துக்கு திரும்பின.

மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க, மத்திகோடு, துபாரே, பல்லே உள்ளிட்ட முகாம்களில் இருந்து இரண்டு கட்டமாக 13 யானைகள், மைசூருக்கு அழைத்து வரப்பட்டு, அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டன.

தங்க அம்பாரி சுமந்த பிரஷாந்த் உட்பட, 13 யானைக ளுக்கும், தினமும் ஐந்து கி.மீ., துாரம் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. யானைகளை பார்த்து மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

நேற்று முன்தினம் ஜம்பு சவாரி நிறைவு பெற்றதும், அரண்மனை வளாகத்தில் யானைகள் நேற்று காலை ஓய்வெடுத்தன. மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து யானைகளை பார்த்தனர்.

பொதுவாக ஜம்பு சவாரி முடிந்ததும் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகே, யானைகள் அதன் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த முறை நேற்றே அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், மைசூருக்கு வந்த மஹாலட்சுமியை அனுப்பி வைக்க கூடாது என்று முடிவு எடுத்ததாக, வனத்துறை அதிகாரி பிரபு கவுடா கூறினார்.

லாரிகள் மூலம் புறப்பட்ட யானைகளுக்கு, அரண்மனை நுழைவாயில் பகுதியில் இருபுறமும் கூடி நின்று, மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.

யானைகளும் தும்பிக்கையை துாக்கி நன்றி செலுத்தபடி சென்றன. இதை பார்த்து, வனத்துறை ஊழியர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

எடை அதிகரிப்பு



மைசூரு தசராவில் பங்கேற்க இரண்டு கட்டமாக யானைகள் வந்த போது, அதற்கு உடல் எடை பரிசோதனை நடந்தது. நேற்று வழியனுப்பு விழாவிற்கு முன்பும், எடை பரிசோதனை நடந்தது.

இதில் ஒவ்வொரு யானையும், 200 முதல் 250 கிலோ எடை அதிகரித்து இருப்பதாகவும், ஆரோக்கியமாக உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us