ADDED : மே 15, 2026 03:36 AM
பெங்களூரு: ஈரான் போர் சூழல் காரணமாக பெங்களூரில் மின்சார வாகனங்களின் விற்பனை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் நீடித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலில் மின்சார வாகனங்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் துவங்கியது.
இந்நிலையில், புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதை குறைக்கும்படி அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, 'மின்சார வாகனங்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்' என, மின்சார வாகன தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த துறை தொழில் வட்டாரங்கள் கூறிய தாவது:
மின்சார வாகனங்களைப் பொருத்தவரையில், இரு சக்கர வாகனங்களின் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கான தேவை மெதுவாக அதிகரிக்கிறது.
குறைந்த செலவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனங்களுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மின்சார வாகன தயாரிப்புகளுக்கான தேவை ஆண்டுக்கு ஆண்டு, 60 சதவீதத்து-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் மின்சார வாகன உள்கட்டமைப்பு மெதுவாக மேம்பட்டு வருவதால், இளம் தலைமுறையினர் மின்சார வாகனங்களை அதிகளவில் தேர்ந்தெடுப்பது தெரிகிறது.
அத்துடன் மின்சார கார்களின் விற்பனையும் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
