sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கர்நாடகாவில் மின் விபத்து அதிகரிப்பு 6 மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு

/

கர்நாடகாவில் மின் விபத்து அதிகரிப்பு 6 மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் மின் விபத்து அதிகரிப்பு 6 மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் மின் விபத்து அதிகரிப்பு 6 மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு


ADDED : மே 02, 2025 05:40 AM

Google News

ADDED : மே 02, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் மின் விபத்துகள் அதிகரிக்கின்றன. 2024ன் ஆறுமாதங்களில் 118 பேர் மின்சாரம் பாய்ந்துஉயிரிழந்தனர்.

இது குறித்து,கர்நாடக மின் ஒழுங்கு முறை ஆணையம்வெளியிட்ட அறிக்கை:

பெஸ்காம் எல்லையில் உள்ள எட்டு மாவட்டங் களில், கடந்த 2015 - 16 முதல், 2023 - 24 வரை, மின் விபத்துகளால் ஆண்டுதோறும் சராசரியாக 109 பேர்உயிரிழந்து உள்ளனர்.

2024ல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 118 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். இதே காலகட்டத்தில், 61 கால்நடைகள் இறந்தன.

இன்னும் 2024 - 25ம் ஆண்டின் புள்ளி விபரங்கள், வெளியிடவில்லை. இந்த ஆண்டில் மின் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 150க்கும் அதிகமாக இருக்க கூடும். மின்சாரம் பாய்ந்து இறந்தவர்களில், பெஸ்காம் ஊழியர்களும்அடங்குவர்.

அதிகரிப்பு


கிராமப்புறங்களில் மின் விபத்துகள் அதிகரித்துள்ளன. விவசாய நிலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. விவசாயிகள், மின்சாரம்

பாயும் கம்பியை தொட்டும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மிதித்தும், உயிரிழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.

மின் கம்பிகள் மீது, இரும்பு கம்பி, தகடுகள் உராய்வதாலும், சரியான விழிப்புணர்வு இல்லாமல், மின் உபகரணங்களை பயன்படுத்துவது, விதிமீறலாக மின் இணைப்பு பெற முற்படும் போது, மின்சாரம் பாய்ந்து இறக்கின்றனர்.

மழைக் காலத்தில் மின் விபத்துகள் அதிகரிக்கின்றன. பொது மக்களின் அலட்சியமும் இதற்கு காரணம். பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல், மின்சாரம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

பணிகள் பாக்கி


மின் விபத்துகளை தடுக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பெஸ்காம் அதிகாரிகள், அபாயமான இடங்களை அடையாளம் கண்டு, சரி செய்கின்றனர். 2024 ஏப்ரல் முதல் 39,024 அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

இங்கு பழுது பார்க்கும் பணிகள் நடக்கின்றன. 17,463 இடங்களில் பணிகள் பாக்கியுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விவசாய சங்கதலைவர் நாகேந்திரா கூறியதாவது:

மின் கம்பிகள், சிதிலமடைந்த கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இவற்றை மின் வினியோக அதிகாரிகள், உடனுக்குடன் மாற்று வது இல்லை. ஆண்டு தோறும் நிர்வகிப்பது இல்லை. இதுவே மின் அசம்பாவிதங்களுக்கு காரணம்.

விளை நிலங்கள், தோட்டங்களில் மின் கம்பிகள், கம்பங்கள் கீழே சாய்ந்திருப்பது குறித்து, விவசாயிகள் புகார் அளிக்கின்றனர்.இவற்றை தாமதிக்காமல் சரி செய்தால், மின் விபத்துகளை தடுக்கலாம்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us