ADDED : மே 09, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: உணவு தேடி வந்து, ௧௦ அடி கிணற்றில் விழுந்த யானை, பொக்லைன் இயந்திரம் மூலம் பாதை ஏற்படுத்தி, மீட்கப்பட்டது.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் ஹன்சிபுரா கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு உணவு தேடி வந்த ஒற்றை ஆண் யானை, மஹாதேவப்பா என்பவரின் நிலத்தில் உள்ள பழைய கிணற்றில் விழுந்தது. இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாமல், பாதிக்கு மேல் மண்ணால் மூடப்பட்டிருந்தது. 10 அடி பள்ளமாக இருந்துள்ளது.
நேற்று இவ்வழியாக சென்ற கிராமத்தினர், பள்ளத்தில் யானை விழுந்திருந்ததை பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு வந்தனர்.
இரவு முழுதும் குழியில் விழுந்து, வெளியே வரமுடியாமல் யானை சோர்ந்து காணப்பட்டது. யானை வெளியே வர பாதை அமைக்கப்பட்டது. மேலே வந்த யானை வனப்பகுதியை நோக்கி சென்றது.

