ADDED : ஜூலை 28, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்ராஜ்நகர் : நண்பர்களுடன் மலை மஹாதேஸ்வராவுக்கு சென்ற வாலிபரை, யானை மிதித்து கொன்றது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹூனுாரின் சன்கடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 26. பெங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம், தன் நண்பர்கள் ஐந்து பேருடன் மலை மஹாதேஸ்வரா மலைக்கு சென்றனர்.
அங்கிருந்து கிராமத்தின் கரிகல்லு குவாரி அருகே சென்ற போது, திடீரென அவர்களை ஒற்றை யானை துரத்தியது.
ஹரிபிரசாத்தை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு, வயிறு, கால், கைகளில் மிதித்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மைசூரு கொண்டு செல்வதற்குள் இறந்து விட்டார். இதனால், கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

