/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அவசரநிலை நாட்கள் மறக்க முடியாத வடு: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வருத்தம்
/
அவசரநிலை நாட்கள் மறக்க முடியாத வடு: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வருத்தம்
அவசரநிலை நாட்கள் மறக்க முடியாத வடு: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வருத்தம்
அவசரநிலை நாட்கள் மறக்க முடியாத வடு: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வருத்தம்
ADDED : ஜூன் 28, 2025 11:10 PM

பெங்களூரு: ''அவசரநிலை நாட்கள் மறக்க முடியாத வடுவாக உள்ளன,'' என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறி உள்ளார்.
'அவசர நிலையின் இருண்ட நாட்கள்' என்ற தலைப்பிலான புத்தகத்தை, பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், எம்.பி.,க்கள் மோகன், கோட்டா சீனிவாஸ் பூஜாரி, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.ஏ., சுனில்குமார், எம்.எல்.சி.,க்கள் ரவி, ரவிகுமார் உள்ளிட்டோர் நேற்று வெளியிட்டனர்.
பின், பூபேந்திர யாதவ் அளித்த பேட்டி:
நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், ஓ.பி.சி., சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி, காகா கலேகர் கமிஷன் அறிக்கையை புறக்கணித்தது. காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்டது.
பா.ஜ., ஆதரவு பெற்ற வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதால், ஓ.பி.சி., சமூகத்தினர் இடஒதுக்கீட்டின் பலனை பெற்றனர்.
சுதந்திரத்திற்கு பின், நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது. 'சப்கா சாத்', 'சப்கா விகாஸ்' கொள்கை மூலம், புள்ளிவிபர அடிப்படையில் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவோம்.
முஸ்லிம்களை திருப்திப்படுத்த இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ளது. 165 கோடி ரூபாய் செலவு செய்து தயாரித்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஒதுக்கி வைத்துள்ளனர். ஓ.பி.சி., சமூகத்திற்கு காங்கிரஸ் அரசு எதுவும் செய்யாது.
காங்கிரசை பொறுத்தவரை அரசியலமைப்பு புத்தகம் என்பது, பாக்கெட்டில் வைக்க கூடிய ஒன்று. ஆனால் நாங்கள் அம்பேத்கர் சிந்தனைகளை செயல்படுத்துவோம்.
அவசரநிலை மூலம் அரசியலமைப்பை கொல்ல முயற்சி செய்து, 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவசரநிலை இருண்ட நாட்கள் புத்தகம் வெளியிட்டுள்ளோம்.
இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது, முன்னாள் பிரதமர் தேவகவுடா. அவசரநிலையின் இருண்ட நாட்கள் மறக்க முடியாத வடுவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.