/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்னுால் ஆம்னி பஸ் விபத்து எதிரொலி அனைத்து பஸ்களிலும் அவசர கதவுகள் கட்டாயம்
/
கர்னுால் ஆம்னி பஸ் விபத்து எதிரொலி அனைத்து பஸ்களிலும் அவசர கதவுகள் கட்டாயம்
கர்னுால் ஆம்னி பஸ் விபத்து எதிரொலி அனைத்து பஸ்களிலும் அவசர கதவுகள் கட்டாயம்
கர்னுால் ஆம்னி பஸ் விபத்து எதிரொலி அனைத்து பஸ்களிலும் அவசர கதவுகள் கட்டாயம்
ADDED : அக் 27, 2025 03:47 AM

பெங்களூரு: ''கர்னுால் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததன் எதிரொலியாக தனியார், அரசு என அனைத்து பஸ்களிலும் அவசர கதவுகள், பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறி உள்ளார்.
ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு பஸ்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து மறுபரீசிலனை செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., - என்.இ.கே.ஆர்.டி.சி., - என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., ஆகிய நான்கு போக்குவரத்து கழகங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், 'பஸ்களில் வணிக பொருட்கள், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக்கூடாது. அவசர காலங்களில் ஜன்னல்களை உடைக்க அனைத்து பஸ்களிலும் கட்டாயம் சுத்தியல் இருக்க வேண்டும். லக்கேஜ் வைக்கும் பகுதியில் யாரையும் துாங்க அனுமதிக்கக்கூடாது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:
கர்நாடகாவின் நான்கு அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளேன்.
தனியார் பஸ்களிலும் அவசர கதவுகள் வழியாக எளிதில் வெளியேறும் வகையில் இருக்க வேண்டும். கண்ணாடிகள் எளிதில் உடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
பஸ்களின் அவசர கதவுகள் சரியாக திறக்கிறதா என்பதை சரிபாரக்க வேண்டும்.
பஸ்களில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள், அவசர கதவுகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இன்று முதல் போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைத்து பஸ்களிலும் சோதனை நடத்துவர். சோதனையில் அவசர கதவுகள், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத பஸ்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

