/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அனைத்து பஸ்களிலும் அவசர கதவு கட்டாயம்
/
அனைத்து பஸ்களிலும் அவசர கதவு கட்டாயம்
ADDED : நவ 15, 2025 08:07 AM

பெங்களூரு: 'குளிர்சாதன மற்றும் உள்ளூர் என அனைத்து விதமான பஸ்களிலும் அவசர கதவு கட்டாயம் அமைக்க வேண்டும்' என, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் நிலுவையில் உள்ள வாகன பதிவு விண்ணப்பங்களை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வரும் 30ம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.
குளிர்சாதன மற்றும் உள்ளூர் என அனைத்து விதமான பஸ்களிலும் அவசர கதவு கட்டாயம் அமைக்க வேண்டும்.
இன்றும் பல பஸ்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், ஜன்னல் வழியாகவே தப்பிச் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, கர்நாடகாவில் பதிவு செய்யப்படும் அனைத்து விதமான பஸ்களிலும் அவசர கதவு கட்டாயம் இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படும்போது அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதற்கு பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, பள்ளி வாகனங்கள் சோதனையிடப்பட வேண்டும்.
போக்குவரத்து துறையில் 2025 - 26 நிதியாண்டில் 14,457 கோடி ரூபாய் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 7451 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

