sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அவசர சட்டம் கவர்னருக்கு சென்றது

/

நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அவசர சட்டம் கவர்னருக்கு சென்றது

நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அவசர சட்டம் கவர்னருக்கு சென்றது

நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அவசர சட்டம் கவர்னருக்கு சென்றது


ADDED : பிப் 04, 2025 06:36 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கடனை வசூலிக்கும் பெயரில், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் மைக்ரோ நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அவசர சட்டம், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மைக்ரோ நிதி நிறுவன ஊழியர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் இருந்து, கடனை வசூலிக்கும் பெயரில் ஊழியர்கள் தொந்தரவு கொடுக்கின்றனர்.

வீடுகளை ஜப்தி செய்து, குடும்பத்தினரை வெளியேற்றுகின்றனர். தொல்லையை தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்நிறுவனத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அவசர சட்டம் கொண்டு வர, சமீபத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அவசர சட்ட வரைவு வகுத்த சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், முதல்வருக்கு அனுப்பி வைத்தார். இதை ஆய்வு செய்த முதல்வர், வரைவு பிரதியை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பி உள்ளார்.

முதலில் வகுக்கப்பட்ட சட்ட வரைவில், தண்டனை அளவு மூன்று ஆண்டுகளாக இருந்தது. தற்போது 10 ஆண்டுகளாக உயர்த்தி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் அவர் கையெழுத்திட்டால் அவசர சட்டம் அமலுக்கு வரும்.

இருவர் தற்கொலை


கடுமையான சட்டத்தை கொண்டு வர, அரசு தயாராகும் நிலையிலும், மைக்ரோ நிதி நிறுவன ஊழியர்களின் தொந்தரவால், நேற்றும் தற்கொலை சம்பவங்கள் நடந்தன.

ஹாசன் அரகலகூடில் வசித்தவர் விவசாயி ரவி, 50. இவர் மைக்ரோ நிதி நிறுவனம் உட்பட சிலரிடம் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார். கடன்காரர்கள் தொந்தரவு அதிகரித்ததால், மனம் நொந்து நேற்று காலை, மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கபல்லாபூர் கவுரிபிதனுாரில் வசித்த நரசிம்மையா, 35, ஆட்டோ ஓட்டி பிழைத்து வந்தார். இவர் மைக்ரோ நிதி நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.

கடனை அடைக்க இரண்டு, மூன்று முறை ஆட்டோவை அடமானம் வைத்தார். அப்போதும் நிறுவனத்தினர் ஊழியர்கள் கடனை கேட்டு இம்சித்ததால், நரசிம்மையா நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us