/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதலிக்கு பரிசு வழங்க முதலாளி வீட்டில் திருடிய ஊழியர் கைது
/
காதலிக்கு பரிசு வழங்க முதலாளி வீட்டில் திருடிய ஊழியர் கைது
காதலிக்கு பரிசு வழங்க முதலாளி வீட்டில் திருடிய ஊழியர் கைது
காதலிக்கு பரிசு வழங்க முதலாளி வீட்டில் திருடிய ஊழியர் கைது
ADDED : அக் 11, 2025 11:02 PM

ஹெப்பகோடி: காதலிக்கு விலை உயர்ந்த பரிசு வழங்குவதற்காக, முதலாளி வீட்டில் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரின் ஹெப்பகோடியில் வசிப்பவர் ஹரிஷ். தொழில் அதிபரான இவர், ஐந்து இறைச்சிக் கடைகளை நடத்துகிறார். கடந்த மாதம் ஹரிஷும், அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்றிருந்தனர். திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
பீரோவில் இருந்த நகைகள், பணம் திருடு போயிருந்தது. ஹரிஷ் அளித்த புகாரை அடுத்து, ஹெப்பகோடி போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில், ஹரிஷின் இறைச்சிக் கடையில் வேலை செய்த ஷ்ரேயாஸ், 22, என்பவரை பிடித்து விசாரித்தனர். நகை, பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார்; அவர் கைது செய்யப்பட்டார்.
ஷ்ரேயாஸும், ஒரு இளம்பெண்ணும் காதலித்து வருகின்றனர். காதலிக்கு விலை உயர்ந்த பரிசு வழங்குவதற்காக, முதலாளியின் வீட்டில் ஷ்ரேயாஸ் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரிந்தது. அவரிடம் இருந்து 416 கிராம் நகைகள், 3.50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 47 லட்சம் ரூபாய். வேறு எங்காவது திருட்டில் ஈடுபட்டாரா என்றும், போலீசார் விசாரிக்கின்றனர்.