ADDED : மே 10, 2026 12:01 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர் பலியானார்.
பெங்களூரு வெளிவட்டச் சாலை நாகரபாவி பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள், இரவில், ஹோட்டலிலேயே துாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் மின்கசிவு ஏற்பட்டதில் திடீரென தீப்பிடித்தது. ஹோட்டலில் துாங்கி கொண்டிருந்த எட்டு பேர் சிக்கி கொண்டனர்.
இவர்கள் அனைவரும் தீக்காயங்களுடன் ஹோட்டலில் இருந்து தப்பி வெளியேறினர். தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீக்காயம் அடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஊழியர் ராஜ்குமார், 45, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள ஏழு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
