ADDED : ஆக 01, 2026 06:37 AM
தங்கவயல்: தங்கவயலின் பேத்தமங்களா அருகே உள்ள பங்காரு திருப்பதி வெங்கட ரமண சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணும் போது 3,100 ரூபாயை திருடிய கோவில் ஊழியரை கோவில் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
பேத்தமங்களா அருகில் உள்ள பங்காரு திருப்பதி வெங்கட ரமண சுவாமி கோவிலில், 2026 ஜூலை 16ம் தேதி உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, கோவில் ஊழியரான ஹெச்.ஆர்.மஞ்சுநாத், 45, என்பவர் 3,100 ரூபாய் திருடி தனது சட்டை பையில் போட்டுக் கொண்டார்.
உண்டியல் பணத்தை திருடி, சட்டை பையில் அவர் வைத்து கொள்ளும் காட்சி 'சிசிடிவி' கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கோவிலின் நிர்வாக அதிகாரிகள் அவரை பணியில் இருந்து நீக்கியதை, நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
