ADDED : ஆக 01, 2026 06:37 AM
தங்கவயல்: தங்கவயல் கிராம பகுதிகளில் சுத்திகரிப்பு செய்த குடிநீர் வினியோக குழாய் திறப்பு விழாவின் போது, பாசி படிந்த அசுத்த நீர் வெளியேறியதால், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அதிகாரிகளை, ஒப்பந்ததாரர்களை கண்டித்தார்.
பேத்தமங்களா அருகே உள்ள வட்டரஹள்ளி உட்பட ஐந்து கிராமங்களில், 12 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
வட்டரஹள்ளியில் திறக்கப்பட்ட குழாயில் பாசி நிறைந்த அசுத்த நீர் வெளி வந்தது.
இதை கவனித்த ரூபகலா, கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதிகாரிகளையும், ஒப்பந்ததாரரையும் கண்டித்தார்.
முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஏ.எம்.லட்சுமி நாராயணா, உத்தரவாத குழுத் தலைவர் ராதாகிருஷ்ண ரெட்டி, காரி பிரசன்னா, ரsமேஷ் வினோத், கார்த்திக், ராம்சாகர் சந்திரபாபு, சென்ன கேசவா ரெட்டி, சந்திரகலா, வைஷாலி, சாகர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
