தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு வன நிலம் மீட்பு

ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு வன நிலம் மீட்பு

ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு வன நிலம் மீட்பு


ADDED : ஜூன் 23, 2025 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காடுகோடி: வனத்துறைக்கு சொந்தமான 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 120 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

பெங்களூரு கிழக்கு தாலுகாவில் உள்ள காடுகோடியில் உள்ள வனப்பகுதியில் சில தனியார் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சமீபத்தில் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நேற்று காலையில் காடுகோடியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட வனநிலங்களில் பெங்களூரு நகர வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கே.ஆர்., புரம் போலீசாரும் உடனிருந்தனர்.

வனப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வேலிகள், பொக்லைன்கள் உதவியுடன் அகற்றப்பட்டன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வன நிலம் மீட்கப்பட்டது.

வன அதிகாரிகள் கூறியதாவது:

வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவின்படி, வனப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, வனத்துறைக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தை சுற்றி வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் காலத்தில் மரக்கன்றுகள் நடப்படும்.

பெங்களூரை சுற்றியுள்ள வனப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வளர்ந்து வரும் நகரில் பசுமையான இடங்களை உருவாக்கவும் வன அமைச்சர் உத்தரவிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 248 ஏக்கர் வன நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். மாசு அதிகரித்து வருவதால், சுத்தமான காற்றை உருவாக்க பெங்களூரில் பசுமையான மரங்கள் நடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us