sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாமுண்டி மலைக்கு இன்று இரவு செல்ல தடை

 சாமுண்டி மலைக்கு இன்று இரவு செல்ல தடை

 சாமுண்டி மலைக்கு இன்று இரவு செல்ல தடை


ADDED : டிச 31, 2025 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2025 07:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மைசூரு: 'ஆங்கில புத்தாண்டை ஒட்டி, மைசூரு சாமுண்டி மலையில் இன்று இரவு, 7:00 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது' என நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

ஆங்கில புத்தாண்டை ஒட்டி, மைசூரு சாமுண்டி மலைக்கு செல்வோருக்கு, நகர போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, இன்று இரவு 7:00 மணிக்கு மேல் உத்தனஹள்ளி நுழைவு, தேவிவன நுழைவு, சாமுண்டி மலை படிக்கட்டுகள் வழியாகவும்; இரவு, 8:00 மணிக்கு மேல் லலித மஹால் நுழைவு வழியாகவும் வாகனங்கள் செல்ல தடை விதிக்க்பட்டுள்ளது.

அதுபோன்று, இன்று இரவு 9:00 மணிக்குள் சாமுண்டி மலையில் இருந்து சுற்றுலா பயணியர், பொது மக்கள் கீழே இறங்கிவிட வேண்டும். 9:00 மணிக்கு மேல் மலையில் இருந்து புறப்படுவோர், தாவரகட்டே நுழைவு வழியாக செல்ல வேண்டும். இந்த விதிமுறைகள், சாமுண்டி மலையில் வசிக்கும் மக்களுக்கு பொருந்தாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us