தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லால்பாக்கில் மற்றொரு நுழைவு வாசல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

 லால்பாக்கில் மற்றொரு நுழைவு வாசல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

 லால்பாக்கில் மற்றொரு நுழைவு வாசல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு


ADDED : மார் 03, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: லால்பாக் பூங்காவில், மற்றொரு நுழைவு வாசல் அமைக்கும் தோட்டக்கலைத்துறை திட்டத்துக்கு, நடைபயிற்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரின் லால்பாக் பூங்கா, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்பும் தாவரவியல் பூங்கா. தினமும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். வார இறுதி நாட்களில், குழந்தைகள், குடும்பத்துடன் வருகின்றனர்.

லால்பாக் பூங்காவுக்குள் நுழைய, ஏற்கனவே நான்கு நுழைவு வாசல்கள் உள்ளன. இந்நிலையில் உணவகம் அருகில், மற்றொரு நுழைவு வாசல் கட்ட, தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. அலுவலகங்களுக்கு செல்ல வசதியாகவும். வாகனங்களின் சுமூகமான போக்குவரத்துக்காகவும், இந்த நுழைவு வாசல் அமையும் என்பது, அதிகாரிகளின் எண்ணமாகும்.

இதற்கு நடை பயிற்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:

லால்பாக் பூங்காவுக்குள் நுழைவதற்கு ஏற்கனவே நான்கு நுழைவு வாசல்கள் உள்ளன. காலை, மாலை நடை பயிற்சியாளர்கள், சுற்றுலா பயணியர், இயற்கை ஆர்வலர்கள் இந்த வாசல்களை பயன்படுத்துகின்றனர். பூங்காவுக்குள் இத்தனை வாசல்களே போதுமானது. மற்றொரு நுழைவு வாசல் திறந்தால், பொது மக்களுக்கு குழப்பம் ஏற்படும். பூங்காவின் இயற்கை சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும். லால்பாக் என்பது வெறும் பூங்கா மட்டுமல்ல. மக்களின் உயிர் மூச்சு. பூங்காவின் தன்மையை பாழாக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us