/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'எஸ்மா' சட்டம் 20 ஆண்டு நீடிப்பு
/
'எஸ்மா' சட்டம் 20 ஆண்டு நீடிப்பு
ADDED : ஆக 20, 2025 07:57 AM

பெங்களூரு : போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட எஸ்மா சட்டத்தின் காலம், மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் சட்டசபையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தாக்கல் செய்த திருத்த மசோதா, நிறைவேறியது.
கர்நாடக சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நேற்று, 'எஸ்மா எனும் கர்நாடக அத்தியாவசிய சேவைகள் மேலாண்மை திருத்த மசோதா - 2025'ஐ அறிமுகப்படுத்தினார்.
பின், அவர் பேசியதாவது:
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், 2015ல் நான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, எஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தின் காலம் 10 ஆண்டுகளாகும். 2021ல் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, இச்சட்டத்தை பயன்படுத்தினார். இச்சட்டம், 2025 மே மாதத்துடன் காலாவதியானது. எனவே, அடுத்த 20 ஆண்டுகளுக்கு இச்சட்டத்தை நீட்டிக்க, சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அவசர மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., - சுரேஷ் குமார்: எஸ்மாவை அமல்படுத்துவதால், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதை தடுப்பது சரியே. அதேவேளையில், ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் குறைகளை வெளிப்படுத்த ஒரு தளம் இருக்க வேண்டும்.
இதன் பின், இம்மசோதா எந்தவித விவாதமும் இல்லாமல், நிறைவேறியது.