/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எத்னால் - விஜயேந்திரா அணி தனித்தனி மாநாடு நடத்த திட்டம்
/
எத்னால் - விஜயேந்திரா அணி தனித்தனி மாநாடு நடத்த திட்டம்
எத்னால் - விஜயேந்திரா அணி தனித்தனி மாநாடு நடத்த திட்டம்
எத்னால் - விஜயேந்திரா அணி தனித்தனி மாநாடு நடத்த திட்டம்
ADDED : மார் 16, 2025 11:05 PM
பெங்களூரு: கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு இடையிலான மோதல், நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது.
இந்நிலையில் விஜயேந்திராவின் பலத்தை காட்டும் வகையில், அவரது ஆதரவாளர்கள் தாவணகெரேயில் வீரசைவ லிங்காயத் மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கான பொறுப்பை முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா ஏற்று உள்ளார். அவரது தலைமையிலான அணியினர் லிங்காயத் தலைவர்கள், மடாதிபதிகளை சந்தித்து, விஜயேந்திராவுக்கு ஆதரவு கோருகின்றனர்.
லிங்காயத் மாநாட்டிற்கு போட்டியாக, எத்னால் அணியினர் ஹிந்து மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கிடையில் விஜயபுராவில் எத்னால் அளித்த பேட்டியில், ''நாங்கள் தனி கட்சி அமைக்க மாட்டோம். எங்கள் கட்சியில் பிரச்னைகளை நாங்கள் சரிசெய்வோம்.
''விஜயேந்திரா மீது நம்பிக்கை இல்லை. வடமாநிலங்களில் ஹிந்துத்வா அடிப்படையில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இங்கும் அப்படியே வர வேண்டும்,'' என்றார்.