
பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, மாலை நேரத்தில் உணவுக்கு பதிலாக சிற்றுண்டியாக 'பன் தோசை' செய்து கொடுத்து அசத்துங்கள்.
செய்முறை:
பன்தோசை செய்ய முதலில் ஒரு கப் ரவை தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் கடுகு, சீரகம், உளுந்து, இஞ்சி போன்றவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் சூடு ஆறியவுடன் கேரட் துருவல் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் ஊற வைத்த ரவை மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்துள்ள கேரட் துருவல் கலவையை, ரவை, தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு மணி நேரத்திற்கு ஊற வைத்தால் தோசை கொஞ்சம் மெதுவாக இருக்கும்.
ஒருவேளை அவசரமாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் மாவு கலந்தவுடன் தோசை ஊற்றிக் கொள்ளலாம்.
வழக்கமான தோசைக்கல்லில் ஊற்றுவதற்கு பதில், குழியான தாளிப்பு கரண்டியில் ஒரு கரண்டி மாவு ஊற்றிக் கொள்ளவும்.
கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால், சுவையான, ஆரோக்கியமான பன் தோசை ரெடி.
- நமது நிருபர் -

