அந்தரங்க வீடியோவை வெளியிட தடை: முன்னாள் எம்.எல்.ஏ., ஐகோர்ட்டில் மனு
அந்தரங்க வீடியோவை வெளியிட தடை: முன்னாள் எம்.எல்.ஏ., ஐகோர்ட்டில் மனு
UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 11:14 PM

பெங்களூரு: ‘எனது அந்தரங்க வீடியோவை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என, ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத், உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம் மாகடி தொகுதியின் ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத், உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனு:
எனது அந்தரங்க வீடியோ ஒன்று தங்களிடம் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடுவதாகவும் தனியார் செய்தி சேனல் வெளிப்படையாக கூறுகிறது. அது என்ன வீடியோ என்று எனக்கே தெரியவில்லை.
ஒருவேளை அந்த வீடியோ உண்மை என்றால், கடந்த 2023ம் ஆண்டு ஒரு பெண், எனது வீட்டிற்கு வந்து உதவி கேட்டார். அந்த பெண்ணை வைத்து, எனது அந்தரங்க வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். எனது வீடியோ வெளியாகாமல் தடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. மஞ்சுநாத் கடந்த 2018 முதல் 2023 வரை, மாகடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். குமாரசாமியின் ஆதரவாளரான இவர், ம.ஜ.த., மாநில உயர்மட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.
பிடதி டவுன்ஷிப் விவகாரத்தில், அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்நின்று இவர் நடத்தி வருகிறார்.
