/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., சுரங்கப்பாதை திட்ட அறிக்கையில் குறைபாடுகளை கண்டுபிடித்த நிபுணர் குழு
/
பெங்., சுரங்கப்பாதை திட்ட அறிக்கையில் குறைபாடுகளை கண்டுபிடித்த நிபுணர் குழு
பெங்., சுரங்கப்பாதை திட்ட அறிக்கையில் குறைபாடுகளை கண்டுபிடித்த நிபுணர் குழு
பெங்., சுரங்கப்பாதை திட்ட அறிக்கையில் குறைபாடுகளை கண்டுபிடித்த நிபுணர் குழு
ADDED : அக் 16, 2025 05:53 AM
பெங்களூரு: பெங்களூரில் சுரங்கப்பாதை திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள, விரிவான திட்ட அறிக்கையில் ஏராளமான குறைபாடுகளை, நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது.
பெங்களூரின் விமான நிலைய சாலையில் உள்ள ஹெப்பாலில் இருந்து, ஓசூர் சாலையில் உள்ள சில்க் போர்டு வரை, 16.75 கி.மீ., துாரத்திற்கு 17,698 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை, துணை முதல்வர் சிவகுமார் முன்மொழிந்தார். சுரங்கப்பாதை அமைக்கும் பொறுப்பு, 'பி - ஸ்மைல்' எனப்படும் பெங்களூரு ஸ்மார்ட் உட்கட்டமைப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிறுவனம் சார்பில், சுரங்கப்பாதை பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தற்போது அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அறிக்கையில் நிறைய குறைபாடுகளை நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.
அதாவது, சுரங்கப்பாதை பணிக்காக வெறும் நான்கு இடங்களில் மட்டுமே மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய திட்டத்திற்கு, நான்கு இடத்தில் மட்டுமே மண் பரிசோதிக்கப்பட்டது மிகவும் குறைவு. லால்பாக் பூங்காவிற்குள் சுரங்கப்பாதை பில்லர்களில் ஒன்றை நிலைநிறுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ள இடத்தில் மெட்ரோ பாதையும் வருகிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரும் ஆண்டுகளில் எத்தனை பேர், சொந்த வாகனத்தில் இருந்து மெட்ரோவுக்கு மாறுவர் என்று தெளிவான தரவு இல்லை. அரண்மனை மைதானம், மேக்ரி சதுக்கத்தில் நுழைவு, வெளியேற குறைந்தபட்சம் இருவழி அமைப்பு வழங்க வேண்டும்.
பீக் ஹவரில் சுரங்கப்பாதையில் எத்தனை வாகனங்கள் செல்ல முடியும் என்பது பற்றி, திட்ட அறிக்கையில் சரியான தகவல் இல்லை. நிலம் கையகப்படுத்துவது, மரங்களை அகற்றுவது, சுற்றுச்சூழல் பாதிப்பு, விரிவான பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு திட்டம், நடைபாதை வடிவமைப்பு குறித்து, திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
மேற்கண்டவை உட்பட பல குறைபாடுகளை, நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது. நிபுணர் குழு கண்டறிந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக, பி - ஸ்மைல் தொழில்நுட்ப இயக்குநர் பிரஹலாத் கூறி உள்ளார்.