/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளைஞர்களின் திடீர் மரணங்கள் குறித்து மூன்று மாதங்களில் நிபுணர் குழு அறிக்கை?
/
இளைஞர்களின் திடீர் மரணங்கள் குறித்து மூன்று மாதங்களில் நிபுணர் குழு அறிக்கை?
இளைஞர்களின் திடீர் மரணங்கள் குறித்து மூன்று மாதங்களில் நிபுணர் குழு அறிக்கை?
இளைஞர்களின் திடீர் மரணங்கள் குறித்து மூன்று மாதங்களில் நிபுணர் குழு அறிக்கை?
ADDED : மே 16, 2025 11:05 PM
பெங்களூரு: இளைஞர்களின் திடீர் மரணங்கள் குறித்து விசாரிக்க மாநில அரசு நியமித்த நிபுணர் குழு, மூன்று மாதங்களுக்குள் அறிக்ககையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் திடீர் மரணங்கள் அதிகரித்தன.
இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரே அதிகம் உயிரிழந்தனர். இந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மாநில தலைமை செயலர் ஷாலினிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு தலைவராக ஜெயதேவா இருதய இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் டாக்டர் கே.எஸ்.ரவிந்தரநாத் நியமிக்கப்பட்டார்.
திடீர் மரணங்களுக்கும், 'கோவிட் 19' தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து குழுவினர் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பர் என கூறப்பட்டது.
அமைக்கப்பட்ட நாளில் இருந்து, ஒரே ஒரு முறை மட்டுமே கூடி இந்த குழு ஆலோசனை நடத்தியது. இதனால் குழுவின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு 34 வயதான நகைச்சுவை நடிகர் ராக்கேஷ் பூஜாரி மாரடைப்பால் உயிரிழந்தார். இது திரைப்படத்துறையில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதனால், தற்போது திடீர் மரணங்கள் குறித்து ஆராயும் குழுவின் மீது விமர்சனங்கள் கடுமையாகி உள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் குழுவின் தலைவர் டாக்டர் ரவிந்தரநாத் கூறுகையில், “கடந்த மூன்று மாதங்களில், திடீர் மரணங்களால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
“அறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் உள்ளது,” என்றார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் மாநில சுகாதார செயலர் ஹர்ஷ் குப்தா கூறுகையில், “இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அரசுக்கு கவலை அளிக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு சரியாக செயல்பட்டு வருகிறது,” என்றார்.