/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடகில் மண்சரிவு ஏற்படலாம் வல்லுநர்கள் எச்சரிக்கை
/
குடகில் மண்சரிவு ஏற்படலாம் வல்லுநர்கள் எச்சரிக்கை
ADDED : மே 21, 2025 11:04 PM

குடகு: இம்முறையும் குடகு மாவட்டத்தின், சில பகுதிகளில் மண் சரிவு ஏற்படும் என, நில ஆய்வியல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆண்டு தோறும் மழைக்காலத்தில், குடகு மாவட்டத்தின், மடிகேரி, விராஜ்பேட், சோமவாரபேட் உட்பட பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்படுகிறது.
மழைக்காலத்தில் மக்கள் உயிர் பயத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது. 2018ல் குடகில் பெருமளவில் மண் சரிவு ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டனர். உயிரிழப்புகளும் நடந்தது.
இம்முறை நான்கு நாட்களுக்கு முன்பே, தென்மேற்கு பருவ மழை துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய நில ஆய்வு வல்லுநர்கள், சில மாதங்களாக குடகு மாவட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர். இம்மாவட்டத்தில் 43 பகுதிகள் அபாயமானவை.
ஹட்டிஹொளே காவிரி ஆறு, லட்சுமண தீர்த்தா ஆறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு இயற்கை சீற்றம் ஏற்பட்ட, அதே இடத்தில் இம்முறையும் மண் சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளது என, அறிக்கை அளித்துள்ளனர்.
வல்லுநர்களின் அறிக்கை அடிப்படையில், குடகு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மண் சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற, போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை அதிகாரிகள், தன்னார்வ அமைப்பு சேவகர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயமுள்ள இடங்களின் சுற்று பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மறுவாழ்வு மையங்கள் அமைக்கவும் தயாராகிறது.