தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அங்கன்வாடி சிறார்களுக்கு காலாவதியான லட்டுகள்

 அங்கன்வாடி சிறார்களுக்கு காலாவதியான லட்டுகள்

 அங்கன்வாடி சிறார்களுக்கு காலாவதியான லட்டுகள்


ADDED : பிப் 26, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் தொகுதியிலேயே, அங்கன்வாடி சிறார்களுக்கு காலாவதியான சிறுதானிய லட்டு வழங்கப்படுவது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், அங்கன்வாடிகளில் சிறுதானிய லட்டு வழங்கப்படுகிறது.

ஆனால் இதுவே அவர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்துகிறது. தரமற்ற லட்டுகள் வழங்குவது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சொந்த தொகுதியான, பெலகாவி ரூரலின் மூன்று அங்கன்வாடிகளில், கன்னட போராளி கஸ்துாரி என்பவர், அங்கன்வாடிகளுக்கு சென்று ஆய்வு செய்த போது, கடந்த 2025 அக்டோபரில் காலாவதியான சிறுதானிய லட்டுகளை, சிறார்களுக்கு கொடுப்பதை கண்டு பிடித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர், இதை வீடியோவில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். சிறார்களின் பெற்றோர், அங்கன்வாடி ஊழியர்களை கண்டித்து உள்ளனர்.

'மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சரின் தொகுதியிலேயே இப்படி நடக்கிறது. காலாவதியான தின்பண்டத்தை கொடுத்து, குழந்தைகளின் உயிரோடு விளையாடுவது சரியா' என, பொது மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us