பெங்., - கார்வார் ரயிலுக்கு குனிகல் நிறுத்தம் நீட்டிப்பு
பெங்., - கார்வார் ரயிலுக்கு குனிகல் நிறுத்தம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 03, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரு - கார்வார் பஞ்சகங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, குனிகல் ரயில் நிலைய நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து கார்வாருக்கு தினமும் பஞ்சகங்கா எக்ஸ்பிரஸ் - 16595 இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு, துமகூரின் குனிகல்லில் சோதனை அடிப்படையில் நிறுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினத்துடன் சோதனை அடிப்படை காலம் முடிந்த நிலையில், பயணியர் வசதிக்காக, குனிகல் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, ரயில் நிற்கும். பின், அடுத்த முடிவு எடுக்கப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
