sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 22, 2026 ,சித்திரை 9, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு வசதிகள் செய்ய வேண்டும் போலீஸ் புகார்கள் ஆணையம் வலியுறுத்தல்

/

 வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு வசதிகள் செய்ய வேண்டும் போலீஸ் புகார்கள் ஆணையம் வலியுறுத்தல்

 வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு வசதிகள் செய்ய வேண்டும் போலீஸ் புகார்கள் ஆணையம் வலியுறுத்தல்

 வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு வசதிகள் செய்ய வேண்டும் போலீஸ் புகார்கள் ஆணையம் வலியுறுத்தல்


ADDED : ஏப் 11, 2026 04:21 AM

Google News

ADDED : ஏப் 11, 2026 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து போலீசார் பணியாற்றுகின்றனர். அவர்கள் வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வசதிகள் செய்து தரும்படி வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மாநில டி.ஜி.பி.,க்கு, போலீஸ் புகார்கள் ஆணைய உறுப்பினர் மோகன்குமார் தானப்பா எழுதிய கடிதம்:

கோடைகாலம் தீவிரம் அடைந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. அரசின் மற்ற துறைகளை விட, போலீஸ் துறை மாறுபட்டது. அவசர சேவைகள் துறையாகும். தினமும், 24 மணி நேரமும், பணிக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தற்போது கர்நாடகாவில், ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வாகனங்கள் வெளியேற்றும் புகை, பல்வேறு துறைகள் சார்பில் நடக்கும் வளர்ச்சி பணிகளால், பெருமளவில் மண், துாசி சூழ்ந்துள்ளது. சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், போக்குவரத்து போலீசார்பணியாற்றுகின்றனர். இரவும், பகலுமாக சாலையில் நிற்கின்றனர். இதனால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே, சிக்னல்கள், பொது இடங்களில் பாராசூட் குடைகள் பொருத்த வேண்டும்.

மண், துாசியில் இருந்து தற்காத்து கொள்ள, தரமான முக கவசம் வழங்க வேண்டும். கோடைகாலம் முடியும் வரை, போக்குவரத்து போலீசாருக்கு உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க, எலக்ட்ரோலைட் பானங்கள், குடிநீர் வசதி செய்வது அவசியம்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us