sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

குறிப்பிட்ட நேரத்தில் பூங்கா திறக்காத ஊழியர்கள் மீது புகார் அளிக்க வசதி

/

குறிப்பிட்ட நேரத்தில் பூங்கா திறக்காத ஊழியர்கள் மீது புகார் அளிக்க வசதி

குறிப்பிட்ட நேரத்தில் பூங்கா திறக்காத ஊழியர்கள் மீது புகார் அளிக்க வசதி

குறிப்பிட்ட நேரத்தில் பூங்கா திறக்காத ஊழியர்கள் மீது புகார் அளிக்க வசதி


ADDED : மே 23, 2025 05:36 AM

Google News

ADDED : மே 23, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:குறிப்பிட்ட நேரத்தில் பூங்காக்கள் திறக்கப்படவில்லை என்றால் பூங்கா ஊழியர்கள் மீது, 'வாட்ஸாப்' மூலம் புகார் அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்து உள்ளது.

கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட பூங்காக்கள் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்க வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை கடைப்பிடிக்காமல், சில பூங்காக்களில் உள்ள ஊழியர்கள் கால தாமதமாக பூங்காக்களை திறப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், மக்கள் பலரும் சிரமப்பட்டனர்.

இது குறித்து நேற்று வனம், சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் சிறப்பு ஆணையர் பிரீத்தி கெலாட் வெளியிட்ட சுற்றறிக்கை:

கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட 1,287 பூங்காக்கள் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 வரை திறந்திருக்க வேண்டும். இந்த நேரத்தில், பூங்காக்களுக்கு வருவோர் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஒரு வேளை அனுமதிக்கப்படவில்லை என்றாலோ அல்லது பூங்கா திறக்கப்படாமல் இருந்தாலோ, சம்பந்தபட்ட பூங்காவின் புகைப்படத்தை எடுத்து 94806 85700 என்ற வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பூங்கா ஊழியர் மீது புகார் செய்யலாம்.

இல்லையெனில், உதவி எண் 1533 ஐ தொடர்பு கொண்டோ அல்லது சஹாய் 2.0 செயலி மூலம் புகார் அளிக்கலாம். மேலும், பூங்காக்களின் நேரம் மற்றும் நுழைவு குறித்த விபரங்களை comm@bbmp.gov.in, scfeccm2024@gmail.com என்ற மின்னஞ்சலில் குறுந்தகவல்கள் அனுப்பி தகவல்களை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

'கிரேட்டர் பெங்களூரு' ஆணையத்தின் வனப்பிரிவு சார்பில் மரக்கன்று நடும் பணிகள் அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்று ஏ.சி.இ.எஸ்., லே - அவுட்டில் மரக்கன்றுகளுக்கு வனம், சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் மேலாண்மை சிறப்பு ஆணையர் பிரீத்தி கெலாட் தண்ணீர் ஊற்றினார். இடம்: சிங்கசந்திரா, பெங்களூரு.






      Dinamalar
      Follow us