/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணத்துக்கு போலி ஆவணங்கள்? 'யு - டியூபர்' மீது போலீசில் புகார்
/
திருமணத்துக்கு போலி ஆவணங்கள்? 'யு - டியூபர்' மீது போலீசில் புகார்
திருமணத்துக்கு போலி ஆவணங்கள்? 'யு - டியூபர்' மீது போலீசில் புகார்
திருமணத்துக்கு போலி ஆவணங்கள்? 'யு - டியூபர்' மீது போலீசில் புகார்
ADDED : செப் 20, 2025 05:03 AM

தார்வாட்: போலியான ஆவணங்களை உருவாக்கி, ஹிந்து இளம்பெண்ணை திருமணம் செய்ததாக, 'யு - டியூபர்' முகளெப்பா மீது புகார் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, தார்வாட் ரூரல் போலீஸ் நிலையத்தில், பஜ்ரங்தள் அமைப்பினர் அளித்த புகார்:
'யு - டியூபர்' முகளெப்பா, அடிப்படையில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர் போலியான ஆவணங்களை உருவாக்கி, ஹிந்து இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். உத்தரகன்னடா மாவட்டம், முண்ட்கோடு துணை பதிவாளர் அலுவலகத்தில், பதிவு திருமணம் நடந்துள்ளது.
இவர் ஹிந்து பெண்களை குறிவைத்து, அவர்களுடன் வீடியோ எடுக்கிறார். ஹிந்து பெண்கள் மற்றும் மதத்தை அவமதிக்கும் வகையில் வீடியோ எடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தார்வாட் எஸ்.பி., குஞ்சன் ஆர்யா கூறுகையில், ''இந்நபர் போலியான ஆவணங்களை கொடுத்து, திருமணம் செய்ததாக தெரியவில்லை. திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் விசாரணை நடத்துவோம். இதற்காக போலீஸ் அதிகாரியை நியமித்துள்ளோம்,'' என்றார்.