போலி மருந்து விநியோகித்தவர் கைது அதிகாரிகள் தீவிர விசாரணை
போலி மருந்து விநியோகித்தவர் கைது அதிகாரிகள் தீவிர விசாரணை
ADDED : செப் 12, 2026 11:45 PM
பெங்களூரு: மருத்துவமனைகளுக்கு போலியான மருந்துகளை விநியோகித்த, மருந்து விற்பனை மையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ராம் நகரின் பிடதி, தொட்டேரி பகுதிகளில் உள்ள பண்ணை வீட்டில், மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், ஆகஸ்ட் 18ம் தேதியன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, போலியான மருந்துகள், போலி பில்கள், லேபிள்கள் உட்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட் டன. இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இணை போலீஸ் கமிஷனர் வம்சி கிருஷ்ணா தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் இணைந்து, கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தமிழகம், மஹாராஷ்டிரா உட்பட ஆறு மாநிலங்களின், 10க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று முன் தினம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அதே போல, பெங்களூரின் மினர்வா சதுக்கத்தில் உள்ள கிருபா ஹெல்த் கேர் அலுவலகம், கிட்டங்கியில் சோதனை நடத்தப்பட்டது. இதன் உரிமையாளர் வீரேஷ்குமாரின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
அப்போது, பெருமளவில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. உயிர் காக்கும் மாத்திரைகள், ஐ.சி.யு.,வில் பயன்படுத்தும் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இங்கிருந்து பெங்களூரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு, மருந்துகள் விநியோகித்திருக்கலாம் என, இந்த சிறப்பு விசாரணை குழுவினர் சந்தேகிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை, ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
குறைந்த விலைக்கு தரமற்ற மருந்துகளை வாங்கி, அவற்றை உயர் தரமான நிறுவனங்களின் பெயர்களில் விற்றுள்ளனர்.
இத்தகைய மருந்துகள், மினர்வா சதுக்கத்தில் உள்ள கிட்டங்களியில் கண்டுபிடிக் கப்பட்டன. வீரேஷ்குமாரை கைது செய்து, விசாரிக்கி ன்றனர்.
