/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதையல் ஆசை காட்டிய போலி மந்திரவாதி கைது
/
புதையல் ஆசை காட்டிய போலி மந்திரவாதி கைது
ADDED : அக் 14, 2025 04:59 AM

விஜயபுரா: புதையல் இருப்பதாக, ஆசை காண்பித்து கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து, மோசடி செய்த போலி மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.
விஜயபுரா நகரில் வசிப்பவர் மகமது காதர் ஷேக், 45. போலி மந்திரவாதியான இவர், 'உங்கள் வீட்டில், நிலத்தில் புதையல் உள்ளது. அதை நான் தேடித்தருகிறேன்' என, பலரை நம்ப வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து, மோசடி செய்துள்ளார்.
இதுபோன்று, மஹாராஷ்டிராவின், கொல்லாபுராவை சேர்ந்த கோவிந்த் வஞ்சாரி என்பவரிடம், 'உங்கள் நிலத்தில் புதையல் உள்ளது. இது பல கோடி மதிப்புடையதாகும்' என, நம்ப வைத்து 1.87 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டார். அதன்பின் தலைமறைவானார்.
இதுகுறித்து, கொல்லாபுரா போலீஸ் நிலையத்தில், கோவிந்த் வஞ்சாரி புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், விஜயபுராவில் நேற்று மகமது காதர்ஷேக்கை கைது செய்தனர்.
அவரது வீட்டில் இருந்த, பில்லி, சூனியத்துக்கு பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.