தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரவுடி கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டு பா.ஜ., - எம்.எல்.ஏ., வக்கீல் பரபரப்பு வாதம்

 ரவுடி கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டு பா.ஜ., - எம்.எல்.ஏ., வக்கீல் பரபரப்பு வாதம்

 ரவுடி கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டு பா.ஜ., - எம்.எல்.ஏ., வக்கீல் பரபரப்பு வாதம்


ADDED : ஜன 14, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ரவுடி பிக்லு சிவா கொலை வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி.,யினர் , பைரதி பசவராஜுக்கு நோட்டீஸ் அனுப்பாமலேயே, 'அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று அரசு தரப்பு குற்றம்சாட்டுவதாக, கர்நாடக உயர் நீதிமன் றத்தில் பசவராஜ் தரப்பு வக்கீல் வாதிட்டா ர்.

பெங்களூரு பாரதிநகரில் நடந்த ரவுடி பிக்லு சிவா கொலை வழக்கில், ஐந்தாவது குற்றவாளியாக பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் இடைக்கால முன்ஜாமினில் வெளியே உள்ளார். இவ்வழக்கை சி.ஐ.டி., விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி சுனில் தத்தா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பசவராஜ் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:

இவ்வழக்கு, 2025 ஜூலை 24ல் சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன் பின், விசாரணைக்கு ஆஜராகும்படி, மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை.

இதற்கு முன்னதாக, எனது கட்சிக்காரர் பாரதி நகர் போலீஸ் நிலையத்தில், ஜூலை 19, 23ல் ஆஜராகி வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இப்போது சி.ஐ.டி., அதிகாரிகள், பசவராஜ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், சாட்சிகளை மிரட்டுவார்; ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பலமுறை கூறி உள்ளார். அதன் ஒரு பகுதியாக, எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய கோரி, அவர் தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் வாபஸ் பெற்றுவிட்டார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.ஐ.டி., அதிகாரிகள், பசவராஜுக்கு எதிராக மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இப்போது அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறுவது நியாயமில்லை.

பிக்லு சிவா கொலைக்கும், பசவராஜுக்கும் எந்த தொடர்பும இல்லை. இவ்வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக, விசாரணை அதிகாரிகள், எந்த ஆவணங்களையும் காட்டவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க பசவராஜ் தயாராக உள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து விசாரணையை இன்று நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us