/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தடையை மீறி பாபாபுடன்கிரி மலையில் அசைவம் சாப்பிட்ட குடும்பம்
/
தடையை மீறி பாபாபுடன்கிரி மலையில் அசைவம் சாப்பிட்ட குடும்பம்
தடையை மீறி பாபாபுடன்கிரி மலையில் அசைவம் சாப்பிட்ட குடும்பம்
தடையை மீறி பாபாபுடன்கிரி மலையில் அசைவம் சாப்பிட்ட குடும்பம்
ADDED : நவ 01, 2025 11:20 PM

சிக்கமகளூரு: பாபாபுடன்கிரி மலைப்பகுதியில் தடையை மீறி, அசைவ உணவு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கமகளூரு மாவட்டம், பாபாபுடன்கிரி மலையில் ஹிந்து வழிபாட்டு தலமான தத்தாத்ரேயா பீடம் மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபாபுடன்கிரி தர்கா உள்ளன. இந்த மலைப்பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு பிரச்னை எழுந்தது.
இதனால், கோவில், தர்காவிற்கு வருகை தருவோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவ்வகையில், கோவில், தர்கா அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்த தடையை மீறி, கோவில் பகுதியில் முஸ்லிம் குடும்பத்தினர் அசைவ உணவு சாப்பிட்டு உள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஹிந்து அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தத்தா பீடம் சேவை குழுவின் தலைவர் ரஞ்சித் ஷெட்டி கூறியதாவது: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நடக்கும் தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், தடை செய்யப்பட்ட பகுதியில் அசைவ உணவு சாப்பிட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நல்லதல்ல. வீடியோ ஆதாரம் இருந்து நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் மவுனம் காப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.

