/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போக்குவரத்து போலீசார் பணி நேரம் பெங்களூரில் புதிய நடைமுறை அமல்
/
போக்குவரத்து போலீசார் பணி நேரம் பெங்களூரில் புதிய நடைமுறை அமல்
போக்குவரத்து போலீசார் பணி நேரம் பெங்களூரில் புதிய நடைமுறை அமல்
போக்குவரத்து போலீசார் பணி நேரம் பெங்களூரில் புதிய நடைமுறை அமல்
ADDED : நவ 01, 2025 11:20 PM
பெங்களூரு: பெங்களூரு போக்குவரத்து போலீசார் பணிக்கு வரும் நேரத்தை கண்டறிய புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து போலீசாரின் பணி இன்றியமையாதது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணியை அனைத்து போக்குவரத்து போலீசாரும் சரிவர செய்கின்றனரா என்பது கேள்விக்குறியே.
குறிப்பாக சரியான நேரத்திற்கு பணிக்கு வருகின்றனரா என்பதை கண்டறிய போலீஸ் துறையே சிரமப்பட்டு வந்தது.
இந்நிலையில், பணிக்கு வரும் நேரத்தை கண்டறிய போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் 'அஸ்ட்ரம் செயலி'யில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, போக்குவரத்து போலீசார், பணிக்கு வந்தவுடன் தங்கள் மொபைல் போனில் நிகழ்நேரத்தில் 'செல்பி' எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த போட்டோவில் நேரம், இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போலீசார் பணிக்கு வந்த நேரத்தை அறிய முடியும்.
இதனால், போக்குவரத்து போலீசார் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகை தருகின்றனரா என்பதை உறுதி செய்ய முடியும்.
இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து துறை இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி கூறியதாவது:
போக்குவரத்து போலீசார் காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையிலும்; மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை என இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிகின்றனர். இருப்பினும், சிலர் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை.
இதை கண்காணிக்க அஸ்டரம் செயலியில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் போலீசார் பணிக்கு வரும் நேரம் கண்காணிக்கப்படும்.
சரியான நேரத்திற்கு பணிக்கு வராதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

