sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 நோயாளி முதியவரை மருத்துவமனையில் தவிக்கவிட்டு ஓடிப்போன குடும்பத்தினர்

/

 நோயாளி முதியவரை மருத்துவமனையில் தவிக்கவிட்டு ஓடிப்போன குடும்பத்தினர்

 நோயாளி முதியவரை மருத்துவமனையில் தவிக்கவிட்டு ஓடிப்போன குடும்பத்தினர்

 நோயாளி முதியவரை மருத்துவமனையில் தவிக்கவிட்டு ஓடிப்போன குடும்பத்தினர்


ADDED : ஜன 04, 2026 04:58 AM

Google News

ADDED : ஜன 04, 2026 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட முதியவரை, குடும்பத்தினர் மருத்துவமனையில் விட்டு விட்டுச் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாகல்கோட் மாவட்டம் ரபகவி - பனஹட்டியில் வசிப்பவர் விட்டல் ராவல், 72. வயது முதிர்வால் நோயால் அவதிப்பட்டார். இவரை வீட்டில் வைத்து பராமரிக்க விரும்பாத குடும்பத்தினர், சிகிச்சைக்கு செல்லலாம் என நம்ப வைத்து, ரபகவி - பனஹட்டி அரசு மருத்துவமனைக்கு, 10 நாட்களுக்கு முன் அழைத்து வந்தனர்.

அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டனர். முதியவர் பத்து நாட்களாக, சரியான உணவின்றி, பராமரிப்பின்றி அவதிப்படுகிறார். குளிக்க வைக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மற்ற நோயாளிகள் பாதிப்படைகின்றனர்.

முதியவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருந்ததால், குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் விட்டு விட்டுச் சென்றுள்ளனர். அவருக்கு பத்து நாட்களாக டாக்டர் நதாப் சிகிச்சை அளிக்கிறார். ஆனால், உடனிருந்து பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. குளிக்க வைக்கவும் ஆள் இல்லை. இவரது நிலையை பார்த்த சிலர், தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை அங்கு வந்த எம்.எல்.ஏ., சித்து சவதி, முதியவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். முதியவரின் குடும்பத்தினரை, மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவர் வைத்திருந்த ஆதார் கார்டை பார்த்த போது, அவரது முகவரி இருந்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, வீடு பூட்டியுள்ளது. அவர்கள் வீட்டை காலி செய்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us