/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணத்துக்கு மறுத்த பெண் கொலை: ஹிந்து அமைப்பினர் போராட்டம்
/
திருமணத்துக்கு மறுத்த பெண் கொலை: ஹிந்து அமைப்பினர் போராட்டம்
திருமணத்துக்கு மறுத்த பெண் கொலை: ஹிந்து அமைப்பினர் போராட்டம்
திருமணத்துக்கு மறுத்த பெண் கொலை: ஹிந்து அமைப்பினர் போராட்டம்
ADDED : ஜன 04, 2026 04:57 AM

உத்தரகன்னடா: திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
உத்தரகன்னடா மாவட்டம், எல்லாபுரா தாலுகாவில் வசித்தவர் ரஞ்சிதா, 30. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று கொண்ட ரஞ்சிதா, தன் பெற்றோர் மற்றும் அண்ணனுடன் வசித்தார்.
அரசு பள்ளியில், மதிய உணவு உதவியாளராக பணியாற்றுகிறார். ரஞ்சிதாவுக்கு சில மாதங்களுக்கு முன், ரபீக், 30, என்பவர் அறிமுகமானார். இருவரின் குடும்பங்களுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் ரஞ்சிதா மற்றும் ரபீக் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ரபீக் அடிக்கடி ரஞ்சிதாவின் வீட்டுக்கு வந்து செல்வார். திருமணம் செய்து கொள்ள விரும்பினார். 'ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு, நிறைய கஷ்டங்களை அனுபவித்ததே போதும். மற்றொரு திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நம் உறவு இப்படியே தொடரட்டும்,' என, கூறினார்.
இதை ஏற்காத ரபீக், திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த ரஞ்சிதாவை வழி மறித்து, திருமணம் கொள்வாயா, இல்லையா என, கேட்டார். அவர் மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்த ரபீக் தப்பியோடினார்.
எல்லாபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.
இதையறிந்த ஹிந்து அமைப்பினர், எல்லாபுரா போலீஸ் நிலையம் முன் குவிந்து, போராட்டம் நடத்தினர். ரபீக்கை கைது செய்து, தண்டிக்கும்படி வலியுறுத்தினர்.

