/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் போலீசை தாக்கிய சென்னை வாலிபர்கள் கைது
/
பெங்களூரில் போலீசை தாக்கிய சென்னை வாலிபர்கள் கைது
பெங்களூரில் போலீசை தாக்கிய சென்னை வாலிபர்கள் கைது
பெங்களூரில் போலீசை தாக்கிய சென்னை வாலிபர்கள் கைது
ADDED : ஜன 04, 2026 04:57 AM
பெங்களூரு: பெண்களிடம் தவறாக நடக்க முயன்றது மட்டுமின்றி, போலீசாரை தாக்கிய சென்னையை சேர்ந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு சிவாஜி நகர் குயின்ஸ் சாலையில் கடந்த 1ம் தேதி அதிகாலையில், நான்கு பெண்கள் டாக்ஸிக்காக காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இரு வாலிபர்கள், அப்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர். இதை ரோந்தில் ஈடுபட்டிருந்த விதான் சவுதா போலீஸ் ஏட்டு ரவி பார்த்தார்.
அந்த வாலிபர்களை அங்கிருந்து விரட்டி அடித்தார். ஆனால், அந்த வாலிபர்கள் போலீசாரை லேசாக தாக்கினர். உடன், அந்த வாலிபர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. போலீசிடம் ஆபாச வார்த்தைகள் பேசியதுடன், அநாகரீகமாகவும் நடந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து விதான் சவுதா போலீசில் புகார் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னையை சேர்ந்த அன்ஷ் மேத்தா, 22, பர்வ ரதி, 22, என போலீசார் நேற்று தெரிவித்தனர்.

