/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விஜயநகரா வனப்பகுதியில் சந்தன சிறுத்தை நடமாட்டம்
/
விஜயநகரா வனப்பகுதியில் சந்தன சிறுத்தை நடமாட்டம்
ADDED : ஜன 04, 2026 04:57 AM

விஜயநகரா: விஜயநகரா மாவட்டத்தின் வனப்பகுதியில் சந்தன சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.
கல்யாண கர்நாடகா பகுதியில், வனவிலங்குகள் குறித்து, ஹொளமத்தி நேச்சர் பவுன்டேஷன் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. விலங்குகளின் நடமாட்டம், அவற்றின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள, விஜயநகரா மாவட்டத்தின் வனப்பகுதியில் டிராப்பிங் கேமராக்களை பொருத்தியுள்ளது.
இந்த கேமராக்களில், சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளநு. பொதுவாக சிறுத்தைகள் மஞ்சள், பழுப்பு நிற தோல் மற்றும் கருப்பு புள்ளிகளை கொண்டிருக்கும். ஆனால், இந்த சிறுத்தை சந்தன நிறம், இளஞ்சிவப்பு ரோமம் மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் கொண்டுள்ளது. இத்தகைய சிறுத்தைகள், தென்னாப்பிரிக்காவில் சில முறையும், தான்சானியாவில் ஒரு முறையும், ராஜஸ்தானின் ரனகபுராவில் ஒரு முறையும் தென்பட்டுள்ளன. கர்நாடகாவில் இப்போதே முதன் முறையாக சந்தன சிறுத்தை காட்சியளித்துள்ளது.
உலக அளவில் இந்த சிறுத்தையை, 'ஸ்ட்ராபெரி' சிறுத்தை என்று அழைக்கின்றனர். விஜயநகராவின் வனப்பகுதியில் தென்பட்ட சந்தன சிறுத்தை ஆறேழு வயதுடைய பெண் சிறுத்தையாகும்.

