தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் பாச போராட்டம் நடத்திய மாணவர்கள்

 அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் பாச போராட்டம் நடத்திய மாணவர்கள்

 அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் பாச போராட்டம் நடத்திய மாணவர்கள்


ADDED : ஜன 04, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: அரசு பள்ளி தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக்கூறி, மாணவர்கள் பாச போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொப்பால் தாலுகா பகதுாரிபண்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக பீரப்பா ஆண்டகி என்பவர் பணியாற்றினார். இவர் சமீபத்தில், பள்ளியில் படிக்கும், 24 மாணவர்களை தனது சொந்த செலவில், விஜயநகரில் இருந்து பெங்களூரு வரை விமானத்தில் அழைத்து சென்றார். இதற்காக, 5 லட்சம் ரூபாய் செலவிட்டார். இது அவருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தி தந்தது. ஒட்டு மொத்த கிராமத்திலும் ஆசிரியர் பீரப்பாவின் மீது நல்ல எண்ணம் உருவானது.

இந்நிலையில், பீரப்பாவை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வந்தது. இதை மாணவர்களிடம் கூறிவிட்டு பீரப்பா செல்ல முயன்றார். ஆனால், மாணவர்களோ பள்ளியில் இருந்து நீங்கள் வெளியே செல்லக்கூடாது. எங்களுடனே இருக்க வேண்டும் என்று, அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாணவர்களை சமாதானம் செய்து வெளியேற முயன்றார். அப்போது, மாணவர்கள் பள்ளியின் கதவுக்கு பூட்டு போட்டு விட்டு யாரும் வெளியே செல்லாதபடி கதவின் முன் அமர்ந்து கொண்டு பாச போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்களாவது மாணவர்களிடம் சொல்லி புரியவைப்பர் என்று பார்த்தால், அவர்களும் குழந்தை போல, 'நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர். இதனால், பீரப்பா வேறு வழியின்றி நாளை நிச்சயம் பள்ளிக்கு வருவேன்' என, உறுதியளித்தார்.

அதன்பிறகே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். கலங்கிய கண்களுடன் அவரும் வெளியேறினார்.

இதேபோல, பாகல்கோட் மாவட்டம் புட்னி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் வெங்கடேஷ், ராம்நகரா பாட்டீல் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதையறிந்த மாணவர்கள் அவர்களை கட்டியணைத்து கதறி அழுதனர். மேலும், ஆசிரியர்கள் மீது பூ வீசி பிரியா விடை கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us