தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சமையல் அறையில் பாம்பு புகுந்ததால் குடும்பத்தினர் கலக்கம்

 சமையல் அறையில் பாம்பு புகுந்ததால் குடும்பத்தினர் கலக்கம்

 சமையல் அறையில் பாம்பு புகுந்ததால் குடும்பத்தினர் கலக்கம்


ADDED : மார் 18, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: வீட்டின் சமையல் அறையில், பாம்பு புகுந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கோலார் மாவட்டத்தின், ஜெயநகர் லே - அவுட்டில் வசிப்பவர் மஞ்சுநாத். இவரும், குடும்பத்தினரும் நேற்று முன்தினம் இரவு உணவு முடிந்து உறக்கத்தில் ஆழ்ந்த பின், ஜன்னல் வழியாக பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. சமையல் அறையில் பாத்திரங்கள், பொருட்கள் அடுக்கி வைத்துள்ள இடத்தில் மறைந்து கொண்டது.

நேற்று காலை மஞ்சுநாத்தின் வீட்டினர், சமையல் செய்வதற்காக சமையல் அறைக்கு சென்ற போது, பாம்பு படம் எடுத்து அமர்ந்திருப்பது தெரிந்தது. வீட்டினர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

அக்கம், பக்கத்தினருக்கு தெரிவித்தனர். அதே கிராமத்தில் வசிக்கும், பாம்பு வல்லுநர் நாகராஜுக்கு தகவல் கொடுத்தனர். அவரும் அங்கு வந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக முயற்சித்து பாம்பை பிடித்தார்.

குடியிருப்பு பகுதியில் இருந்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் பாம்பை விட்டு வந்தார். இரவு முழுதும் பாம்பு வீட்டுக்குள் இருந்துள்ளது. மஞ்சுநாத் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us