ADDED : ஆக 26, 2025 02:55 AM

பிரசன்ன விநாயகர் ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவில் பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் 1,500 ஆண்டு முதல் 2,000 ஆண்டுகள் பழமையானது. கங்கர்கள் அல்லது ஹொய்சாளர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என, வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இது கர்நாடகாவின் பழமையான கோவில்களில் ஒன்று.
கோவில் பசுமையான இயற்கை சூழல் மற்றும் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளதால், சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் விநாயகர் உற்சவம், மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
லட்சுமி கணபதி ராம்நகரில் ஏராள மான வரலாற்று பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்கள் உள்ளன, ஹுனசனஹள்ளி கிராமத்தில், கோடி விநாயகர், ஹாரோஹள்ளியில் லட்சுமி கணபதி கோவில், தஷபுஜ லட்சுமி கணபதி கோவில் உட்பட பல்வேறு கோவில்கள் உள்ளன. இவைகள் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். பக்தர்களை சுண்டி இழுக்கின்றன. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, இக்கோவில்களில் உத்சவங்கள் நடத்தப்படவுள்ளன.