/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரபல ரவுடி 'ஆட்டோ' நாகா பண்ணை வீட்டில் படுகொலை
/
பிரபல ரவுடி 'ஆட்டோ' நாகா பண்ணை வீட்டில் படுகொலை
ADDED : ஜன 26, 2026 05:18 AM
நெலமங்களா: பெங்களூரின், லக்கரே மற்றும் ஹுலியூரு துர்கா போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இருந்தவர் ரவுடி 'ஆட்டோ' நாகா. இவர் மீது, பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகா அருகில் உள்ள பாலாஜி பண்ணை வீட்டில், ரவுடி நாகா தங்கியிருந்தார்.
நேற்று மதியம் இவர் இருந்த அறைக்குள் நுழைந்த மர்ம கும்பல், அரிவாள், இரும்புத்தடியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
தகவலறிந்து அங்கு சென்ற மாதநாயகனஹள்ளி போலீசார், ரவுடியின் உடலை மீட்டனர். கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணையை துவக்கியுள்ளனர்.
சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்கின்றனர்.

