ADDED : மே 28, 2026 12:13 AM
அ நிறம் | அளவு
கோலார்: கோலார் நகரின், கள்ளிபுரா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பசவராஜ். இவர், பசு ஒன்றை வளர்க்கிறார். அதற்கு லட்சுமி என, பெயர் சூட்டி குடும்ப உறுப்பினரை போல, அன்பு காட்டி பராமரிக்கிறார்.
பசு கருவுற்றிருந்தது. நிறைமாதம் என்பதால், நேற்று பசுவுக்கு வளைகாப்பு நடத்தினர். இதில், கிராமத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கர்ப்பிணி பெண்ணை அலங்கரிப்பதை போல, பசுவை பூக்களால் அலங்கரித்து, பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
அந்த பசுவுக்கு வெல்லம் உட்பட, இனிப்பு பண்டங்கள் கொடுத்தனர். நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிக்கப்பட்டது. கிராமத்தினருக்கு பல வகையான விருந்தும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
