/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சோலார் மின் உற்பத்தி ஆர்வமற்ற விவசாயிகள்
/
சோலார் மின் உற்பத்தி ஆர்வமற்ற விவசாயிகள்
ADDED : ஆக 05, 2025 06:57 AM
பெங்களூரு : தங்கள் நிலத்தில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்து வி வசாயிகள் பயன்படுத்த அனுமதி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில், கர்நாடக விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. ஆறு ஆண்டுகளில் ஒரு விண்ணப்பம் கூட தாக்கல் செய்யப்படவில்லை.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இவற்றில் 'பி.எம்.குசும்' திட்டமும் ஒன்றாகும். 2019ல் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
தங்களின் நிலத்தில் விவசாயிகள் சோலார் பேனல்கள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம். இவர்கள் பயன்படுத்தியது போக, கூடுதல் மின்சாரத்தை, மின் விநியோக நிறுவனங்களுக்கு விற்கலாம். இதனால் அவர்களுக்கு வருவாய் கிடைக்கும். சோலார் பேனல் பொருத்த மத்திய அரசு மானியமும் வழங்குகிறது.
பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பம்ப்செட்களுக்கு, சோலார் மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை பயன்படுத்துவதில், கர்நாடக விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. ஆறு ஆண்டுகளில் ஒரு விவசாயி கூட, திட்டத்தின் பயன் பெற, விண்ணப்பிக்கவில்லை என்று, தகவல் வெளியாகியுள்ளது.