ராம்நகர் கலெக்டர் ஆபீஸ் முன் விவசாயிகள் போராட்டம்
ராம்நகர் கலெக்டர் ஆபீஸ் முன் விவசாயிகள் போராட்டம்
ADDED : பிப் 05, 2026 06:47 AM

ராம்நகர்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
ராம்நகர் பிடதி பகுதியில் மாநகராட்சி பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று பல்வேறு விவசாய அமைப்புகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநில அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இதனால், பெங்களூரு - மைசூரு பழைய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டது.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், சிறிது நேரத்திற்கு பின் விடுவித்தனர்.
