/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சரை கண்டித்து விவசாயிகள் கோஷம்
/
அமைச்சரை கண்டித்து விவசாயிகள் கோஷம்
ADDED : டிச 18, 2025 07:07 AM

பெலகாவி: தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டித்தருவது தொடர்பாக மனு அளிக்க வந்த தங்களை, பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா அவமதித்ததாக கூறி, விவசாயிகள் அவரின் அறையில் போராட்டம் நடத்தினர்.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
நேற்று காலையில் பெலகாவி படால அங்கலகி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பாவை சந்திக்க அவரது அறைக்குசென்றனர். அப்போது தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து விளக்கினர்.
அதற்கு அமைச்சர் மது பங்காரப்பா, 'நான் அனைத்து பணிகளையும் முடித்து விட்டேன். முதலில் இங்கிருந்து புறப்படுங்கள்' என்று கூறிவிட்டு, விவசாயிகளை பார்க்காமல் சென்றுவிட்டார்.
அமைச்சரின் நடவடிக்கையால் கோபமடைந்த விவசாயிகள், 'விவசாயிகளுக்கு சரியாக பதில் அளிக்காத நீங்கள் எதற்கு அமைச்சராக உள்ளீர்கள்' என்றனர். மேலும், அமைச்சரின் அணுகுமுறையை கண்டித்து, அவரின் அறையில் இருந்தபடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்த போலீசார், அங்கு வந்து விவசாயிகளை சமாதானப்படுத்தி, விவசாயிகளை, அமைச்சரின் அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

