/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் பொங்கல் விழாவில் நடப்பாண்டு 'தமிழர் உலா'
/
தங்கவயல் பொங்கல் விழாவில் நடப்பாண்டு 'தமிழர் உலா'
தங்கவயல் பொங்கல் விழாவில் நடப்பாண்டு 'தமிழர் உலா'
தங்கவயல் பொங்கல் விழாவில் நடப்பாண்டு 'தமிழர் உலா'
ADDED : டிச 18, 2025 07:08 AM
தங்கவயல்: தங்கவயல் தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 15ல், 'தமிழர் உலா' கலைநிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து, நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது
இதுகுறித்த கூட்டத்திற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் தலைமை வகித்தார்.
தங்கவயல் தமிழ் சங்கம் சார்பில், 1983ம் ஆண்டு முதல் தொடர்ந்து தை முதல் நாளன்று பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அதுபோல திருவள்ளுவர் தின விழாவும் அன்றைய தினம் கொண்டாடுவது வழக்கம்.
வரும் 2026ன் ஆண்டின் இருபெரும் விழாவில் மூவேந்தர் சின்னம் பதித்த தமிழ் கொடி, திருவள்ளுவர் கொடி ஏற்றுதல்; திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் ஓதுதல்; தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழார்வலர்களை சிறப்பித்தல்; கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவள்ளுவர் நகர்வலம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் இடம் பெறுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, தீபம் சுப்ரமணியம், வி.சி.நடராஜன், திருமுருகன், ஆர்.பிரபுராம், கரிகாலன் எல்.கருணாகரன், முருகன், அப்பு ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

