ADDED : ஜூலை 12, 2026 11:54 PM

குமாரசாமி லே - அவுட்: 'எக் ரைஸ்' கடை உரிமையாளரான, 20 வயது இளைஞர், மாநகராட்சி பூங்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பெங்களூரு குமாரசாமி லே - அவுட்டை சேர்ந்தவர் ராகேஷ், 20. ராஜ்யோத்சவா நகரில், எக் ரைஸ் போன்ற பாஸ்ட் புட் தயாரிக்கும் துரித உணவகம் நடத்துகிறார். நேற்று காலை இங்குள்ள மாநகராட்சி பூங்காவில், ராகேஷ் இறந்து கிடப்பதாக, குமாரசாமி லே - அவுட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்த போலீசார், ராகேஷின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இது குறித்து, பெங்களூரு தென் மேற்கு பிரிவு, டி.சி.பி., அனிதா கூறியதாவது:
இறந்த ராகேஷ், இன்று அதிகாலை 1:30 மணிக்கு, அவரின் நண் பர்களின் ஒருவருக்கு போன் செய்துள்ளார். அப்போது, ஏற்கனவே திட்டமிட்டபடி, மன்சனபெலேவுக்கு மீன் பிடிக்க செல் லலாம் என கூறி உள்ளார்.
பின், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, மாநகராட்சி பூங்காவில் இருந்து ராகேசும், அவரது நண்பர்களும் சுவர் ஏறி குதித்தது பதிவாகி உள்ளது. அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, முழு விவரமும் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
